தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியர் காலம் : தொல்காப்பிய நூலுக்கு சிறப்புப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியர் உடன் பயின்றவர். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்கு சமகாலத்து நூல்கள். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியமும்) கண்டிருந்தார். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை பொ.ஊ.மு. 711 என்று பொருத்தியது.
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து.பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும்.தமிழரின் தொன்மையை பழமையைக் காத்து இயம்பும் நூல்.தொன்மை + காப்பியம் (தொன்மைகளை காத்து இயம்புதல்)= தொல்காப்பியம்.(பண்புத்தொகை): மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்று அழைக்கப்படுகின்றது.